ஞாயிறு, 4 அக்டோபர், 2020

முருகன் முப்பாட்டனா?

நாம எப்பவுமே யாரு வம்புக்கும் போறது இல்லை.அதை மீறி வம்பு வந்தால் யாருடா நீ வந்தேறி னு #வம்பு கிட்டயே  எதிர் கேள்வி கேட்டுட்டு நாமளும் ஒரு வந்தேறி பட்டத்தை வாங்கீட்டு நகரும் ஆளு😊😊😊...!

அந்த வகையில் மூஞ்சி புக்குல என்ன நடக்குது னு பார்க்கலாம் னு எனது பக்கத்தை  #SCROLL பண்ணிக்கிட்டு இருந்தேன். அங்கே ஒரே #ஜண்டை முருகன் கருப்பு நிறமா? வெள்ளை நிறமா னு...!😂😂😂

அந்த கேப் ல ஒரு அண்ணன் ரொம்ப கோபமா வடநாட்டு முருகன் தென்னாட்டு முருகன் ஆரியன் பாராப்பான் னு பிரிச்சி மேஞ்சிட்டாரு😳 அண்ணனின் விசுவாசி போல🙄🙄🙄....!

அங்கு வைக்கப்பட்ட அடிப்படை புரிதலற்ற வாதங்கள்😊

🖤 முருகன் கருப்பு நிறத்தவன்...!
🖤 முருகன் முப்பாட்டன்..!
🖤 முருகன் எங்க தாத்தா..!
🖤 முருகனை தமிழர்கள் மட்டும் தான் வழிபடுறாங்க...!
🖤 ஆரிய பிராமணர்கள் முருகனை இழிவு படுத்தி வெள்ளை நிறமா மாத்திட்டாங்களாம்...!
🖤 மிக முக்கியமா முருகன் சிவனுக்கு மகன் இல்லையாம்🤫

ஆக இவர்களிடம் நான் கேட்கும் கேள்வி என்னா னா சக்திதாஸ் ன் முப்பாட்டன்கள் எழுதிய புராண இதிகாசங்களை தான் நம்பவில்லை👇👇

நம்ம அண்ணன் #சீமானின் முப்பாட்டன்களான 
கடுவனிளவெயினனார், ஆசிரியன் நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார், நல்லழிசியார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், #நக்கீரர், #அருணகிரிநாதர் போன்றோர்  எழுதிய..!👇

❤️பரிபாடல்
❤️ திருமுருகாற்றுப்படை
❤️ திருப்புகழ்

இந்த நூல்கள் சொல்வதையாவது பேசுங்கடா மங்குனி ஞானிகளா னு கேட்க தோணுச்சி. ஆனால் சிரிச்சிட்டு இந்த பக்கமா ஓடி வந்துட்டேன்🚶🏽‍♂️🚶🏽‍♂️🚶🏽‍♂️.

சரி கொஞ்சம் கருத்து சொல்லுவோம். யாரும் கேட்கமாட்டாங்க🤒 விருப்பம் உள்ளவங்க தெரிஞ்சுக்கோங்க👇

"செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப"....!

"ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை"....!

என்று பரிபாடல் #கடுவனிளவெயினனார் செவ்வேளின் நிறம் கதிரவன் ஒளி ஒக்கும் என்று உவமையாக்குகிறார்....!   ஆனால்  நப்பண்ணனாரோ  கொழுந்துவிட்டெயும் தீயின் நிறத்தை  உவமையாக்குவார் இப்பாடலை....!

இன்னும் ஒருபடி மேலே சென்று #திருமுருகாற்றுப்படை யோ👇👇👇

"செய்யன் சிவந்த ஆடையன் செல்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்" னு சொல்லுது...!

ஆச்சா😊 இங்கே உங்க முப்பாட்டனின் நிறத்தை மாற்றியது ஆரிய பிராமணர்களான #நக்கீரரும் #கடுவனிளவெயினனாரும் தான் னு ஊர ஏமாத்தணும். இதுக்கு யார் தயாரோ பின்னூட்டத்துக்கு வாங்க😂😂😂🚶🏽‍♂️....!

அடுத்து கீழே கொடுத்துள்ள விலாசத்தில் சென்றால் உலகம் முழுவதும் முருகன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை காணலாம்...!👇👇👇
அடுத்ததாக முருகன் எங்கள் முப்பாட்டன் சிவனுக்கு மகன் அல்ல என்று ஒரு கோஷ்ட்டி சுத்திக்கிட்டு திரியுது அவர்களுக்கான பதிவு இது👇👇👇


இன்னும் இதையே சொல்லி ஊரை ஏமாத்துறவங்க இந்த இலக்கியப் பாடலுக்கு மட்டும் விளக்கம் சொல்லுங்க👇

"முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்"

ஆச்சா....!👇

முருகனைக் கார்த்திகைப் பெண்களும்  அன்னை பார்வதியும்  இருவருக்கும் மகனெனப் பரிபாடல் சொல்லுது(8:127,128)....!

அதோடு முருகன் சூரபத்மனை மாய்த்ததையும் பரிபாடல் குறிப்பிடுகிறது. முருகன் தன் ‘பிணிமுகம்’என்னும் யானை மீதமர்ந்து சூரன்தங்கி வாழும் கடலுக்குச் சென்றார்; அவன்மா மரமாகுவும் மலையாகவும் மாற்ருருக் கொண்டு மறைந்தனன். கந்தவேள் தன்னுடைய வேலை எறிந்து மாவினை அழித்தார். மலையினையும் அழித்தார்; சூரனின் சுற்றத்தாரையும் அழித்தார் என்று பரிபாடல் சொல்லுது...!

அதோடு முருகன் ஆறு தலைகளையும் இளங்கதிர் மண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர் னு பரிபாடல் சொல்லுது👇

"குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை"!

கந்தவேள் தன் பன்னிருகைகளிலும் பன்னிருபடைகளைக் கொண்டுள்ளார் என்றும் அவர்தம் முந்நான்கு தோளும் முழவினை ஒப்பானது என்றும்  முருகனது பேரறிவையும், பேராற்றலையும் புலப்படுத்தவே அறுதலைகளையும், பன்னிருகைகளையும் உடையவராகஅவரை உருவகம் செய்துள்ளனர் என்கிறார் புலவர்👇

"மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன்"

"ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்குமே"

என்ற திருமுருகாற்றுப்படை வரிகள் மூலம் சங்ககாலத்திலே #வேதநெறியும் வேதநெறி நின்று யாகங்களை வைதீக தர்மத்துடன் நால்மறை முழங்க ஆற்றும் பண்பாடும் நிலவி வந்திருப்பதை தெளிவாக சுட்டி காட்டுகிறது...!

"மூன்று வகை குறித்த முத்தீச் செல்வம்’
மூன்றுவகையான யாகாக்னியைப் போற்றுவதையே செல்வமாகக் கொண்டவர்கள்
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்"

மூன்று புரிகளைக் கொண்ட மூன்று நூல்களை(பூநூல்) அணிந்தவர்கள் இவ்வாறாக வைதீக, வேத, வேதாங்க தர்மம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களிடம் பரவி இருந்ததை பதிவு செய்கிறார் நக்கீரர்....!

இப்போது ஒரு கூட்டம் திருமுருகாற்றுப்படை காலம் என்ன பரிபாடலில் ஆரிய இடைச்செருகல் இரிக்கி னு ஒரு கூட்டம் வரும். ஆக🏃🏃🏃

இரவு வணக்கம் மக்களே😊

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...