ஞாயிறு, 4 அக்டோபர், 2020

வர்ணம் பிறப்பால் வருவதா?

எனதருமை அன்பர்களே இந்து தர்மம் எங்கும் பிறப்பால் வேற்றுமையை கூறவில்லை....!


இதையே👇👇👇

பகவத்கீதை அதிகாரம் 8, சுலோகம் 29 சொல்கிறது....!👇👇👇

"ஸமோஹம் சர்வபூசேஷு நமே த்வேஷ்யோ அஸ்திநப்ரிய: |
யே பஜந்தி துமாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்"

அதாவது.....!

💟பலவகையாக உள்ள எல்லா உயிரினங்களிலும் நான் சமமாக இருக்கிறவன். எனக்கு யாரிடமும் வெறுப்பு இல்லை யாரிடமும் விருப்பமும் இல்லை. ஆகவே என்னை சேரத்தக்கவன் சேரதகாதவன் என்று எவருமில்லை. என்னிடம் பக்தி கொண்டு பிரியம் வைப்பவர் எவரோ என்னிடத்தில் அவரும் அவரிடத்தில் நானும் வாழ்கிறோம்💟..! என்கிறது.....!

ஆனால் பகவத்கீதையில் வரும் பிரிவுகளை குணம் மற்றும் தொழிலின் அடிப்படையில் பிரித்தேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர்....!

இதையே பகவத்கீதை அத்யாயம் 4 ஸ்லோகம் 13 சொல்கிறது...!👇

"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|
தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம்"

அதாவது....!

💟குணத்துக்கும், செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்💟....! என்கிறார்...!

இதையே திருவள்ளுவர்...!👇👇👇

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என்கிறார்...!

அதாவது பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமமே...! ஆனால் அவர்களின் #தொழிலின் அடிப்படையில் #வேற்றுமை உண்டு என்கிறார்...!

மனுஸ்மிருதி கூறுகிறது:-                                                      

உபந்யாசம் முடியும்வரை பிராமணனும் சூத்திரனுக்கு நிகரானவனே என்கிறது

#மனு- அத்யாயம் 2 ஸ்லோகம் 172

"இருபிறப்பு இருபெயர் ஈரநெஞ்சத்து ஒருபெயர்
அந்தணர் அறன் அமர்ந்தோயே" #பரிபாடல்

அதாவது உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒருபிறப்புமாகிய இரண்டு பிறப்பினையும்;
அப் பிறப்பாலே வந்த இரண்டு பெயரினையும், அருளுடைய நெஞ்சத்தினையும் ஒப்பற்ற
புகழினையும் உடைய அந்தணரது வைதிக
அறத்தைப் பொருந்தியவனே என்று இக்கூற்றை சங்க இலக்கியம் ஊர்ஜிதம் செய்கிறது....!

மஹா பாரதத்தில் யுதிஷ்டிரன் அசரீரியின் கேள்விக்கு பதில் கூறுகிறான்......!👇👇👇 

“பிறப்பாலோ, கல்வியாலோ ஒருவன் பிராமணன் ஆக முடியாது.  உயர் குலத்தில் பிறந்தோனும் ஒழுக்கம் இல்லையேல் கீழானவனே.  ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என்கிறார்‌....!

“கீழ்க் குலத்தை சார்ந்தவனும் உயர் பண்புகளால் மேலான வர்ணத்தை அடைகிறான்,” – ஆபஸ்தம்ப சூத்ரம் (2-5-10-11).

இதையே திருவள்ளுவர்👇👇👇

"மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு" என்கிறார்.....!

கோத்திரங்களை தொடங்கிய எந்த ரிஷியுமே பிறப்பால் பிராமணர் அல்ல.  மீனவ இனத்தில் பிறந்தவர் வியாசர்.  நாகர் இனத்தில் பிறந்தவரே ஷ்ருவா ரிஷியும்.  வசிஷ்டரும் ஜரத்கார மஹரிஷியும் கலப்புத் திருமணம் புரிந்தோரே.  மஹரிஷி ஆச்சார்ய கௌதமர், சத்யகாம ஜாபாலா என்போரை பிராமணராகவே ஏற்றார்.....!

சடங்குகள் செய்வதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றால் அதுவும் தவறானது.  சடங்குகள் எல்லா மதங்களிலும் உள்ளன.  எல்லா குலத்தோரும் சடங்குகள் செய்கின்றனர்.....!

கல்வியால் ஒருவன் பிராமணன்-அந்தணன் என்றால் அதுவும் தவறானதே.  கல்வி பயின்று ஒருவன் ஒழுக்கமுடையவனாகவோ அருளாளனாகவோ இருப்பான் என்பது நிச்சயமில்லை. ஆகவே ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆக முடியும்......!

வள்ளுவர் கூறுகிறார்:-
அந்தணர் என்போர் அறவோர் மற்றும்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்....!

ஆர்ய சமாஜ நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதி அவர்கள் ஜாதி, மத, பேதமின்றி ஆர்வமுள்ள அனைவருக்கும் பூணூல் அணிவித்து, வேதோபதேசம் செய்து பிராமணராக்கினார்....!

ரிக் வேதம் கூறுகிறது:-

"இந்த்ரம் வர்தந்தோ அப்துர: க்ருண்வந்தோ விஷ்வம் ஆர்யம்" #ரிக் (9-63-5)

“உலக மாந்தர் அனைவரையும் நல்வழிப் படுத்தி      அந்தணர்களாக ஆக்குவீராக.”

வேத,புராணங்களில் வர்ணத்தின் அடிப்படையில் வேத கல்வி அளிக்கப்படவில்லை !

இதற்கு ஸ்ரீ பாதராயணர் - சாந்தியோக்கிய உபநிஷத்தில் - 4:4 to 9 இல் சத்யகாமனின் வரலாறு மூலம் விளக்குகிறார்.....!

கெளதம முனிவர் ஒரு சூத்திரனான - சாத்யகாமனுக்கு  வேதம் சொல்லி கொடுப்பதாகவும். இதை படிக்க வர்ணங்கள் முக்கியமில்லை என கூறுகிறார் ! பின் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு வேத அறிவை சொல்லிக்கொடுத்து பிராமணனாக ஆகுகிறார்....!

ஆனால் நம் முன்னோர்கள் வேதத்தை போற்றி புகழ்ந்தே வந்துள்ளனர். அவற்றில் அவசியமற்ற பல இடைச்செருகல்கள் உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதோடு இன்று நமது கைகளில் சுழலும் மனுதர்மம் கூட இடைச்செருகல்களின் குவியலே....!

"வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத்தகும் அறம் எலாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே"                                                                                      #திருமூலர்_திருமந்திரம்

"காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்வதற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத்தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே"                                                                              #திருமூலர்_திருமந்திரம்

ஆனால் பிறப்பால் மனிதர்கள் எவருமே பிராமணன் ஆகமுடியாது என்றும்  அவ்வாறு ஞான மார்க்கத்தில் முற்றுப்பெறாமல் தன்னைப் பிராமணன் என அழைப்பவனை மூடப் பார்ப்பான் என்கிறார் முற்றுப்பெற்ற சித்தபெருமான் #திருமூலர்.....!

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."
           #ஆசான்_திருமூலர்

விளக்கம்:

தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர்......!

இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்....!

"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. "
                     திருமூலர்

விளக்கம்:

சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது......!

சாதி, மத பேதமின்றி எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு, அறநெறிப்படி வாழ்ந்து, பரப்பிரம்மத்தை (இறையை) பரிபூரணமாக உணர்ந்து, அருட்பெருஞ்சோதியுடன் இரண்டறக் கலந்த அனைவரும் பிராமணர்கள்தான். அவர்களது உள்ளம்தான் எம்பெருமான் களிநடம் புரியும் உன்னத அரங்கம் என்று அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமான் பகர்ந்துள்ளார்.....!

பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.......!

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."
                    திருமூலர்

ஆக இதிலிருந்து வர்ணம் என்பது பிறப்பால் வருவது இல்லை என்பதையும். பிறப்பால் வருவது என்று தம்பட்டம் அடிப்பவர்கள் மூடர்கள் என்றும் தெளிவாகிறது....!

தமிழ் ஆண்டுகள்

வட மொழி பெயர்களுக்கு நிகரான அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்....!

1.பிரபவ - #நற்றோன்றல்

2.விபவ - #உயர்தோன்றல்

3.சுக்கில - #வெள்ளொளி

4.பிரமோதூத - #பேருவகை

5.பிரசோத்பத்தி - #மக்கட்செல்வம்

6.ஆங்கீரச - #அயல்முனி

7.சிறிமுக - #திருமுகம்

8.பவ - #தோற்றம்

9.யுவ - #இளமை

10.தாது - #மாழை

11.ஈசுவர - #ஈச்சுரம்

12.வெகுதானிய - #கூலவளம்

13.பிரமாதி - #முன்மை

14.விக்ரம - #நேர்நிரல்

15.விச - #விளைபயன்

16.சித்திரபானு- #ஓவியக்கதிர்

17.சுபானு - #நற்கதிர்

18.தாரண- #தாங்கெழில்

19.பார்த்திப - #நிலவரையன்

20.விய - #விரிமாண்பு

21.சர்வசித்த - #முற்றறிவு

22.சர்வதாரி - #முழுநிறைவு

23.விரோதி - #தீர்பகை

24.விகிர்தி- #வளமாற்றம்

25.கர - #செய்நேர்த்தி

26.நந்தன - #நற்குழவி

27.விசய - #உயர்வாகை

28.சய - #வாகை

29.மன்மத - #காதன்மை

30.துன்முகி - வெம்முகம்

31.ஏவிளம்பி - பொற்றடை

32.விளம்பி - அட்டி

33.விகாரி - எழில்மாறல்

34.சார்வரி - வீறியெழல்

35.பிலவ - கீழறை

36.சுபகிருது - நற்செய்கை

37.சோபகிருது - மங்கலம்

38.குரோதி - பகைக்கேடு

39.விசுவாவசு - உலகநிறைவு

40.பராபவ - அருட்டோற்றம்

41.பிலவங்க - நச்சுப்புழை

42.கீலக - பிணைவிரகு

43.சவுமிய - அழகு

44.சாதாரண - பொதுநிலை

45.விரோதி கிருது - இகல்வீறு

46.பரிதாபி - கழிவிரக்கம்

47.பிரமாதீச - நற்றலைமை

48.ஆனந்த - பெருமகிழ்ச்சி

49.இராட்சச - பெருமறம்

50.நள - தாமரை

51.பீங்கள - பொன்மை

52.காளயுக்தி- கருமைவீச்சு

53.சித்தார்த்தி - முன்னியமுடிதல்

54.ரவுத்ரி- அழலி

55.துன்மதி- கொடுமதி

56.துந்துபி- பேரிகை

57.உருத்ரோத்காரி - ஒடுங்கி

58.இரக்தாட்சி- செம்மை

59.குரோதன்- எதிரேற்றம்

60.அட்சய - வளங்கலன்....!

பழந்தமிழர்களின் புத்தாண்டு எது?

எது நமது புத்தாண்டு?

பதிவுக்கு செல்வதற்கு முன்பு இவர்கள் உருட்டும் உருட்டுகளை பார்க்கலாம். முதல் உருட்டாக பாரதிதாசன் அவர்கள் சித்திரை ஆரியர்களின் புத்தாண்டு என்று ஒரு கவிதை எழுதி இருப்பார். எங்கு சென்றாலும் இதையே தூக்கிக்கொண்டு சுத்துகின்றனர் போராளிகள்....👇

இதற்கு மறுப்பாக தமிழ் அறிஞர் அ. வெங்கடேசன் அவர்கள்👇

நித்திரையில் இருக்கும் தமிழா...!
தை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு......! அண்டி திருடிப் பிழைக்க வந்த திராவிட கூட்டம் காட்டியதே அது ...! 
தரணி ஆண்ட தமிழருக்கு சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு...!

என்று பதிலடி தருகிறார்..!

அடுத்ததாக ஒரு சிலர் பழங்கால கல்வெட்டு என்று ஒன்றைக் காட்டி அதில் தை மாதமே முதல் மாதமாக குறிப்பிட்டிருப்பதாகவும் ஆதலால் பண்டையத் தமிழர் தை மாதத்தையே முதல் மாதமாக கொண்டிருந்தார்கள் என்றும் சொல்கிறார்கள்....!

சரி, அது எவ்வளவு பழமையானது என்பது பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தோமேயானால் அது 300 ஆண்டுகள் பழமையானது என்று ஒரு செய்திக் கட்டுரை சொல்கிறது.....!

மேலும் அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களும் தற்காலத் தமிழ் எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களுமே ஆகும். தமிழி எழுத்துக்களோ, வட்டெழுத்துக்களோ கூட அல்ல. ஆகவே இது முதலில் பழங்கால கல்வெட்டே அல்ல.  இந்த கல்வெட்டு 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.......!

சரி, இடைக்காலத்தில் வந்த அந்தக் கல்வெட்டில் தை மாதம் முதல் மாதமாக ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?

முதலில் அந்தக் கல்வெட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி தெளிவாக விளங்கவில்லை, அதனுடன் வந்த  செய்திக் கட்டுரை சொல்வதையே நாம் உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.....!

அப்படியே அதில் தை மாதம் முதல் மாதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தைத்திங்கள் முதல் நாள் அறுவடைத்திருநாள் என்பது நாம் அறிந்ததே...! 

அன்றிலிருந்து வியாபாரத்தை தொடங்குவதால் தை முதல் நாளை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக தமிழக விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டிருக்கலாம். தற்போதும் கூட ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் புத்தாண்டாகக் கொண்டாடிலும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக கருதுகிறோம், அது போல் இதுவும் இருக்கலாம்....! 

அப்படியும் "தை ஒன்றே வருடப்பிறப்பு" என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம்  ஒரே ஒரு கேள்வி...!👇

அதாவது மாதங்களில் தை முதல் நாள் எப்போது வரும் என்று எப்படி கணிப்பீர்? சூரியனின் சுழற்சியை வைத்துத்தானே? சூரியன் மகர ராசியில் நுழையும் நாளை வைத்துத் தானே? ஆகவே பஞ்சாங்கத்தை, நம் பழங்கால வானிலை முறையை வைத்துத் தானே தை முதல் நாளையும் கணிப்பீர்? பழங்கால வானிலை முறையில் மகர ராசி முதல் ராசியா? அது பத்தாம் ராசி அல்லவா? ஆகவே தை மாதம் வருடத்தின் பத்தாம் மாதமாகத் தானே இருக்க முடியும்....? 

பண்டைய வானிலை முறையின் ராசியில்  சூரியனின் பெயர்ச்சியை வைத்து மாதங்களைக் கணிக்கும் பண்டையத் தமிழர்களிடம் இருந்தது..!

ஆக, தை முதல் நாளன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் வேளான் தொழிலை முதன்மையான தொழிலாகக் கொண்ட தமிழ்ச்சமூகத்திற்கு மிகவும் முக்கியமான திருநாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எவருக்கும் இருக்க முடியாது. அறுவடைத் திருநாள் தொழில் கணக்கு வழக்குகளுக்கான முதல் நாளாக, வர்த்தக வருடத்தின் முதல் நாளாக கருதப்பட்டதற்கான வாய்ப்பு நிச்சயமாக உண்டு. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று தை முதல் நாளை ஒரு புதிய செழுமையான காலத்தை எதிர்நோக்கும் நாளாக இன்றளவும் நாம் கொண்டாடி வருகிறோம்....!

இதன் விளைவுகளாக உருவாக்கப்பட்டிருக்கலாம் அந்த கல்வெட்டு👈...!

சரி இனி பதிவுக்கு வருவோம் எது தமிழ் புத்தாண்டு?👇👇👇


ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.....!

சூரிய மேஷ(மேட) இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது....!

அதாவது சூரியனைப் பிரதானமாகக் கொண்டு தான் நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இருந்துள்ளது. ஆகவே தான்  இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது.....!
(இதற்கு சௌர வழிபாடே சான்று)

ஆகவேதான் கேரளா, மணிப்பூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.....!

அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன....!

இன்னொரு சுவையான செய்தியும் உண்டு..!😂😂😂 வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது தெரிய வரும். ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று கொள்ளப்பட்டது.....!
(இது மறைக்கப்பட்ட உண்மை.)

மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ய காலமாகக் கொள்ளப்படுகிறது காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது. அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது.....!

சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி....!

சித்திரை மாதம் கோடை காலத்தின் ஆரம்பம். காலநிலை மாற்றம் என்று உலகமே அழும் இக்காலத்திலும், மார்ச் கழிந்தால் தான் குயில் கூவ ஆரம்பிக்கிறது. தமிழ்நிலத்தின் முக்கிய தாவரங்களான வேங்கையும் வேம்பும் கொன்றையும் பூத்துக்குலுங்க ஆரம்பிக்கின்றன. இப்படி, இன்றும் இளவேனில் ஆரம்பிக்கும் மாதம் சித்திரை.....!

ஆனால் 10ஆம் மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிங்கலம் (2.210) முதலான நிகண்டுகள், ஆவணியே முதல் மாதம் என்று சான்று கூறுகின்றன.....!
 
அதோடு தொல்காப்பியத்தின் அகத்திணையியலின் 6ஆம் 7ஆம் சூத்திரங்களுக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர் (பொ.பி 14ஆம் நூற்.), ஆவணி முதல் ஆடி வரை ஒரு ஆண்டு என்று வரையறுக்கிறார். இந்தக்குறிப்புகள் தவிர, ஆவணி ஆண்டுத்தொடக்கம் எந்தளவுக்கு நடைமுறையிலிருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை....!

ஆகவே ஒரு ஆண்டின் தொடக்கம் என்ன என்ற விவாதத்தில்  கலந்துகொள்ள வேண்டியது சித்திரையும் ஆவணியும் தான். ஆனால், இதில் சம்பந்தமே இல்லாமல் #தை எப்படிக் கலந்துகொண்டது? தைப்புத்தாண்டு என்பது, பண்பாட்டுவெளியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் சக்தியாக வளர்ந்தது எப்படி என்று எனது அறிவார்ந்த தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்.....!

இனி இதற்கான வரலாற்று சான்றுகளை காண்போம்....!👇👇👇

இங்கு இவர்கள் சித்திரையை ஏற்க மறுப்பதற்கு காரணம் தமிழர்களின் 60 வருடப்பெயர்களாகும் ஆனால் சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன......!

இந்த ஆண்டுப்பெயர்கள் தமிழில் இல்லையே என்று வருத்தப்படுவோர்களுக்காக👇


வராகமிகிரர் என்பவர் கி.பி. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த கணிதவியல், வாணவியல், ஜோதிட அறிஞர்.இவர் எழுதிய பிருகத் ஜாதகம் என்னும் நூலில் இந்த 60 ஆண்டு விபரங்கள் 
உள்ளன. அதோடு போகரின் சீடர் புலிப்பாணி ஜோதிடத்திலும் இடைக்காட்டு சித்தர் எழுதிய நூல்களிலும் இந்து 60 ஆண்டுகள் தொடர்பான தகவல்கள் உண்டு....!

அகத்தியரின், "பன்னாயிரத்தில்' "பங்குனி" மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.....!

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' 

என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும்...!

அதாவதுமேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்' என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்....!

இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார். அதோடு முனைவர் ராசமாணிக்கனார் புஷ்ப விதி என்னும் நூலில், #சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்...!

கமலை ஞானப்பிரகாசர்நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார்.....!

அதோடு கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில்
வருணிக்கப்பட்டுள்ளது👇

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக...!👇

"தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' 

என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.....!

நாமக்கல் திரு. வி. ராமலிங்கம் பிள்ளை அவர்களும், “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்....!

சித்திரையே வா! நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா!” என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்....!

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்......!

"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென" 

                #சிலப்பதிகாரம் 

என்கிறது சிலம்பு அதாவது  "சித்திரை மாதத்துச் சித்திரை மீன் மதியத்தைச் சேர்ந்தது என்று வெற்றிவேல் மன்னனுக்கு நேர்ந்த இடுக்கணை ஒழிப்பதற்கென" என்று ஊரார் விழாவெடுத்தைச் சொல்கிறது சிலம்பு....!

அங்கே ஊரின் முதுகுடிப் பெண்டிர் "பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென"  என்று கோடைகாலம் நீங்கி பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரக்க வாழ்த்துவதையும் காண்கிறோம்......!

ஆக தை யை இவர்கள் ஆதாரமாக காட்டுவதில் எங்கும் முதல் வருடம் என்றோ வருடப்பிறப்பு என்ற தொனியிலோ இல்லை. மாறாக அந்நிகழ்வு தை நீராடலையே குறிக்கிறது....!👇 


ஆனால் இங்கு எழுந்திருக்க வேண்டிய விவாதம் சித்திரையா ஆவணியா என்பதே ஆகும். ஆனால் அவணி என்பதற்கு தகுந்த சான்றுகள் கிடைக்கும்வரை தமிழிர்களாகிய நாம் சித்திரை ஒன்றையே தமிழர் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏...!

தை நீராடல் என்றால் என்ன?

தை நீராடல்

(இதைத்தான் தைப்புத்தாண்டு என்று இலக்கிய ஆதாரமாக தூக்கிக்கொண்டு சுற்றி வருகின்றனர்)

தமிழர்களின் புத்தாண்டு எது என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவின் உள்ளே இருக்கும்👇


அதிகாலையில் இளம் பெண்கள் துயிலெழுவது, எல்லோரும் சேர்ந்து குளிர்ந்த நீர்நிலைகளுக்குச் செல்வது, அதில் நீராடி நல்ல கணவனை அருளுமாறு நோன்பிருப்பது ஆகிய வழக்கங்கள் சங்ககாலம் முதற்கொண்டே நம் தமிழின மக்களிடையே நிலவி வந்திருக்கின்றன.....! 

ஆனால், மார்கழி மாதத்திற்கு மாறாக தைத் திங்களில் இந்த நோன்பினை இளம் பெண்கள் மேற்கொண்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது......!

அதாவது தைத் திங்களில் நீர்நிலைகள்
குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடப்பது
ஆவணி மாதம் முதல் பெய்த மழையால் ஆறு குளங்கள் எல்லாம் நிரம்பி அதன்பிறகு பெய்த பனியாலும் வாடைக் காற்றாலும் தைத் திங்களில் நீரெல்லாம் குளிர்ந்து கிடக்கும். இந்தச் செய்தி #புறநானூறு, #குறுந்தொகை முதலிய சங்க இலக்கியங்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன......!👇

"தை இத் திங்கள் தண்கயம் போலக்
கொளக் கொளக் குறையா கூழுடை வியனகர்"

அதாவது தைத் திங்களின் தண்மையான குளம்போல அள்ள அள்ளக் குறையாத அன்னம் நிறைந்த வீடுகளை உடைய பெரிய நகரங்களை உடையதாம் கிள்ளி வளவனின் நாடு...!

"பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிற்" #குறுந்தொகை
 
அதாவது முன்பு, வேம்பின் பசுங்காயைத் தந்தாலும் பூந்தேனின் இனிய கட்டி இது என்று போற்றிய நீங்கள் இப்போது, தை மாதத்தின் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையிலுள்ள இனிய சுனை நீரைக் கொடுத்தாலும் வெம்மையாக இருக்கிறது. உவர்ப்பாக இருக்கிறது என்கின்றீர்! உம்முடைய அன்பின் மாறுபாடே இதற்குக் காரணம்' என்று குறைபட்டுக் கொள்கிறாள் ஒருத்தி!

தை நீராடும் இளம் பெண்களைப் பற்றி 
#நற்றிணை பாடல் ஒன்று நல்ல கணவனைப் பெறவேண்டி தைத் திங்களில் குளிர்ந்த குளத்து நீரில் நீராடும் ஓர் இளம் பெண்ணை நமக்குக் காட்டுகிறது...!👇

"இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇ
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான்உற்ற நோய்க்கே" #நற்றிணை

அதாவது நாணம் மிக்க இளம் பெண்ணான அவள் தன் தோழிகளோடு கூடிச் சென்று தைத் திங்களில் குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடக்கும் குளத்தில் நீராடி நோன்பிருக்கிறாள். "தான் உற்ற காதல் நோய்க்கு அவளே மருந்து' எனக் கூறுகிறான் இளைஞன் ஒருவன். நோன்பு என்பது தான் கொண்ட நோக்கத்திற்காக தனக்கு நேரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மன உறுதியாகும்.
 நாணம் தடுத்ததால் அல்லவோ காதலனோடு புறப்பட்டுச் சென்றுவிடாமல் அவனைக் கணவனாக அடைய வேண்டி அவள் நோன்பிருக்கிறாள்!
மகளிர் பலர் கூடி நீராடும் தைத் திங்களின் குளுமையான குளம் போலக் காட்சியளிக்கிறதாம் அவன் மார்பு! பரத்தையர் பலர் தழுவி மகிழ்ந்திட, அவர்களுடன் பழகிவிட்டு இல்லம் திரும்பும் தலைவனை நோக்கி இவ்வாறு இடித்துரைக்கிறாள் தோழி.....!

நீ அப்படிப்பட்ட ஒழுக்கமுடையவன் என்று யாரேனும் சொல்லக் கேட்டாலே வெகுளும் என் தலைவி இப்போது உன்னைக் காண நேர்ந்தால் என்னாகுவாளோ என்று சொல்லி வருந்துகிறாள்.

செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணின் என்னாகுவள் கொல்?
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர் படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே #ஐங்குறுநூறு

 இத்தகைய மகளிர் ஆடல், "அம்பா ஆடல்' எனப் பரிபாடலில் குறிப்பிடப்படுகிறது. திருமணம் ஆகாத இளம் பெண்கள் தம் தாயர் அருகிருக்க நீராடுவதால், "அம்பா ஆடல்' என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர் பலர் விளக்கம் கூறுவர். "அம்பா' என்பதற்கு "அன்னை' என்று பொருள் சொல்லப்பட்டுள்ளது.
 சில்லென்று பனி பெய்கின்ற தை மாதத்து வைகறைப் பொழுதில் இளம் பெண்கள் வைகை ஆற்றில் நீராடி, அதன் கரையோர மணற் பரப்பில் அந்தணர்களால் எழுப்பப்பட்ட வேள்வித் தீயின் வெப்பத்தில் தம் ஈர ஆடைகளை உலர்த்திக் கொள்ளும் காட்சியைப் பரிபாடலில் காண்கிறோம். இளம் பெண்கள் பூமியின் வெம்மை தீர்ந்து, மழை வளத்தால் குளிர்ச்சியடைவதற்காக இவ்வாறு நீராடினார்களாம்....!
 
"வெம்பாதாக வியல்நில வரைப்பென
 அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
 முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
 பனிப் புலர்பு ஆடிப் பருமண லருவியின்
 ஊதை யூர்தர உறைசிறை வேதியர்
 நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின்
 தையல் மகளிர் ஈரணி புலர்த்தர" #பரிபாடல்

அதாவது உள்ளத்தில் உள்ள நோக்கம் நிறைவேறும் பொருட்டு துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு சில ஒழுக்கம், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது நோன்பு எனப்படுவது என்றாலும், சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டவர்கள் என்பதால், இந்தத் தை நீராடல் நோன்பைக் கடைப்பிடித்தனர் என அறிய முடிகிறது.
 அறிவியல் நோக்கிலும் மார்கழி - தை மாதங்களில் "ஓசோன்' என்ற உயிர் வாழ்க்கைக்கேற்ற உன்னதமான வாயு குளிர்ந்த நீர் நிலைகளின் மேற்பரப்பில் பரவி இருக்கும் என்ற அறிவியல் உண்மை அறிந்தே அவ்வாறு செய்திருக்கிறார்கள் நம் முன்னோர். மேலும், இதனால் இயற்கையாக நம் உடம்பில் ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆண்டு முழுவதும் நீடித்திருப்பதற்கு வழி கண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிய வேண்டுவதாகும்......!

"நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும்”, என்கிறது #பரிபாடல்

அதாவது மார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம். அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி, மக்கள் எண்ணங்களை தைத்துக் கொள்கிறாள். தை-இ என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது. தை என்றால், தைத்தல் என்று பொருள். தைத்தல், பின்னுதல், பொருத்துதல், சேர்த்தல் என்னும் பொருளிலேயே வருகிறது. கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் தம் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது.....!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியுள்ளனரே என்பார்கள். யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு. அப்படிக் காத்திருக்கும் கன்னியர் எல்லோருக்குமே திருமணம் ஆகி விடுவதில்லை.....!

காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம் மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான்...!👇

“நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?”#கலி

“இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று நக்கல் பேச்சு பேசுகிறான். இப்படியெல்லாம் அக வாழ்கையின் ரசனை ததும்ப ஓடும் கருத்துக்களைக் கொண்டதால் அந்த மாதமே வருடப் பிறப்பு என்று எப்படி சொல்லலாம்......?

இலக்கியங்களின் பார்வையில் தமிழ் மொழித்தோற்றம்

தமிழ் மொழி எப்படி தோன்றியது? இலக்கியங்களை ஆராய்வோமா?😊

தமிழை ஆதியிலே சிவபெருமான் உமாதேவிக்கு வகுத்து அருளியதாக ஆசான் திருமூலர் குறிப்பிடுகிறார்👇👇👇

"தமிழோடு ஆரியம் தந்த தயாபரன்
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று"

என்று தமிழை சிவபெருமானே நல்கினார் என்று உரைக்கிறார்....!

அதோடு,

"ஆரியந் தமிழோடு இசையானவன்"

என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்....!

மற்றும் தேவாரம் பாடிய  திருஞானசம்பந்தரோ👇 

"தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"

என்று எம்பெருமானே தமிழிற்கு சாட்சி  என்று நிறுவுகிறார்....!

மற்றும் "உலகு அளித்தனை தமிழ் தெளிந்தனை"

என #குமரகுருபரரும் காசி கலம்பகத்தில் கூறியுள்ளார்.....!

மற்றும் அகத்தியர்👇

"உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும் 
வழக்கினு மதிக்கவி னினுமரபினாடி
நிழற்பொலி கணிச்சி மணிநெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்."

சிவபிரான் தந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் உலகிற்குத் தந்தார் என்பதே இதன் கருத்தாம்.....!

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக பாரதியாரோ👇

"ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்" என்கிறார்.....!

சிந்தித்து செயல்படுங்கள்....!

பசுவின் சிறுநீர்

பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை 'கோமோத்ரா மற்றும் கோமியம் என்ற பெயரில் ஒரு புனிதப் பொருளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.....!

அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் கிருமிநாசினி என்பார்கள்..........!

பசுவின் கோமோத்ரத்தை  வீடுகளில் தெளிப்பது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. பசுஞ்சாணத்தைக் கெட்டியாகத் தட்டை வடிவில் தட்டி, காய வைத்து, வரட்டியாக்கி சமைப்பதற்கான எரிபொருளாக, ஹோமங்களில், யாகங்களில் நெருப்பை வளர்க்கப் பயன்படுத்துவது வழக்கம்.......!

பசுவின் பால், அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின்  சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்தே பஞ்சகவ்யம்' தயாரிக்கப்படுகிறது. இது மூளை தொடர்பான நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது...!

பசுவிடம்  இருந்து உருவாகும்  ஐந்து பொருள்களால் தயாராகும் இந்த  பஞ்சகவ்யம்  வாதம்,பித்தம்,கபம்,தோல் நோய்,நீரிழிவு நோய்,சிறுநீரகப் பிரச்சினை போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.மேலும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது......!

சித்தர்கள் இந்த பஞ்சகவியத்தினைக் கொண்டு பஞ்சகவிய கிருதம் என்ற மருத்தினைத் தயாரித்தனர். இதையை நம்மாழ்வாரும் எடுத்துரைத்தார்.

மேலும், பசுவின் சிறுநீரைக் கொதிக்கவைத்து, அதன் நீராவியைச் சேகரித்து, அதிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இனிமாவாகவும்(Enema) பயன்படுத்தப்படுகிறது...!

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாக  அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூலில் குறிப்புகள் இருக்கின்றன. அந்த நூலின் கால்-கை வலிப்பு மற்றும் பைத்தியம்’ என்ற அத்தியாயத்தில் (Epilepsy and Insanity Chapter) எழுதப்பட்டிருக்கிறது.....!

பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் கோமூத்ரா ஹர்தகி' என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது...!

ஜெர்மானிய அறிஞர் ஹென்னிங் பிராண்ட் சிறுநீர் மூலம் இரும்பு உள்ளிட்ட உலோகங்களை தங்கமாக மாற்றும் "ரசவாதிகளின் கல்" என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோதுதான் 1669இல் பாஸ்பரஸ் தனிமத்தை கண்டறிந்தார்.....!

நவீன வேதியியலின் தந்தையான ராபர்ட் பாயல் மற்றும் ஈர்ப்பு விதியை கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் ஆகியோரும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவகளே. தமிழ் சித்தர்களின் "ரசமணி" போன்றவை இத்தகைய முயற்சிகளின் இந்திய வெளிப்பாடே.....!

அதோடு கோமோத்ராவில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்....!👇


இதை பயன்படுத்தியே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களில்  ஒருவர் குணமடைந்ததாக ராஜ்யசபாவில் அறிவித்தார்....!👇


ஆக இந்துக்களின் நம்பிக்கை என்பதற்காக வீண் விமர்ச்சனங்களை அள்ளி வீசும்  அறிவாளிகளே இந்த பதிவின் இறுதியில் இணைத்துள்ள காணொளியை முழுமையாக கேளுங்கள்....!

அதோடு இயற்கை அறிவியலாளர்களில் ஒருவரான தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரின் அறிவுரையையாவது  உள்வாங்க முயற்சியுங்கள்....!

சங்க இலக்கியங்களில் இராமாயணம்

அகநானூறு

"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே"
(அகநானூறு 70: 13-17).
புறநானூறு:

"கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே"
(புறநானூறு 378: 18-22)

சிலப்பதிகாரம்

(சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்)

"அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்"

"மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே"

மணிமேகலை:

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்"
(உலக அறவி புக்க காதை, 10-20)

இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்👇

"மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்"

சீவக சிந்தாமணி:

"மராமரம் ஏழும் எய்த
வாங்குவில் தடக்கை வல்வில் இராமனை வல்லன் என்பது        
இசையலால் கண்டதில்லை"

பழமொழி நானூறு:

"பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்"

ஆகவே ராமாயணம் என்பது  கம்பனுக்கு முன்பே காலம் காலமாக தமிழரால் அறியப்பட்ட காவியமேே...!

மகாபாரதமும் சங்க இலக்கியங்களும்

தமிழ் கூறும் நல்லுலகமும், பாரத பண்பாட்டின் இரு பொக்கிஷங்களில் ஒன்றான மகாபாரதமும்:

எனது தந்தை எனது சிறு வயதில் பீஷ்மர், துரோணர், கர்ணன், அர்ச்சுனன் போன்றவர்களின் வீரத்தை முதன்மைப்படுத்தி மகாபாரத கதைகளை எனக்கு சொல்லித் தருவார். நானும் காரணமே அறியாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்போது நான் அறிந்திருக்கவில்லை இன்று இந்த அளவுக்கு மகாபாரதத்தின் மீது மோகம் கொள்வேன் என்று.....!
சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது அதை பலமுறை பார்த்திருந்தாலும் அதில் மிகைப்படுத்துதல் இருப்பதாகவே எனக்கு தோன்றியது. கூகுள் செய்து மகாபாரதத்தை படிக்க துவங்கினேன். ஆரம்பத்தில் எனக்கு கிடைத்த ஆதிபர்வத்தை படிக்க ஆரம்பித்தபோது எனக்கு எதுவும் புரியவில்லை. ஏனென்றால் அது அத்தனை கிளைக்கதைகளை கொண்டது. ஒரு கட்டத்தில் 1000 பக்கங்களுக்கு மிகாமல் இருந்த ஆதி பர்வத்தை புரிந்தோ புரியாமலோ ஆறு மாத கால இடைவெளியில் படித்து முடித்தேன்.....!
இருந்தும் எனது மோகம் அடங்கவில்லை. மகாபாரதம் சம்பந்தமாக எந்த ஆர்ட்டிக்கிள் வந்தாலும் அதை படிப்பதே எனது முதல் வேலையாக இருந்தது. சமீபமாக தான் நான் படித்த ஆதிபர்வமானது திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட
"The_Mahabharata" என்ற ஆங்கில நூலை தமிழாக்கம் செய்தது பேரருளாளர் திரு அருள் செல்வ பேரரசன் என்பதை அறிந்து அவரது இந்த மகத்தான பணியை கண்டு வியப்படைந்தேன்‌. அதோடு அவர் இலவசமாக ஆன்லைனில் படிக்கவும் ஏற்பாடு செய்ததை அறிந்து இன்றுவரை எனது மோகத்தை அங்கே ஆற்றிக்கொள்கிறேன். நான் பெற்ற இன்பத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்....!

முழு மகாபாரதம் தமிழில்...!👇👇👇


பொதுவாக நாம் இதிகாசங்கள் குறித்து பேசும்போதெல்லாம் இங்கே அவ்வப்போது ஒரு திரிபுவாதம் எழுகிறது. அதாவது இந்த இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் என்று ஒரு தரப்பினரும், தமிழர்களிடமிருந்து திருடி எழுதப்பட்டது என்று இன்னொரு தரப்பினரும் அவரவர் பசியை அவரவர் புரிதலுக்கேற்ப ஆற்றி வருகின்றனர்.....!

ஆனால் இந்த இதிகாசங்கள் பிராமணர்களால் எழுதப்பட்டு  பிராமணர்களின் உயர்வையும், சிறப்பபையும் பற்றி எழுதுவதே  நோக்கமாக இருந்திருந்தால் இதிகாச கதாநாயகர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருந்திருக்க வேண்டும். அதோடு இதை எழுதி நமக்கு அளித்தவரும், இதை போற்றியவர்களும் பிராமணர்களாக தான் இருந்திருக்க வேண்டும்....!

ஆனால் இராமாயணத்தின் கதாநாயகன் ராமனோ சத்ரியன், மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணரோ யாதவ குலத்தை சேர்ந்தவர். அதோடு மகாபாரதத்தில் வர்ணமாற்றம், குல வழக்கங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றுவது போன்ற பல தத்துவங்கள் புதைத்துள்ளதே அன்றி பிராமண பெருமையோ உயர்வோ இங்கு இல்லை. கர்ணன், ஏகலைவன் என்று கம்பு சுற்றுபவர்கள் அவரவர் லாபிக்காவே அவர்களை தூக்கி பிடிக்கின்றனரே  அன்றி நிதர்சனத்தை ஏற்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை....!

ஆனால் அதே இதிகாசங்களில்  கெட்டவனாகவும், வில்லனாகவும் காட்டப்படும் ராவணன் சுத்தமான பிராமணன். அதோடு பாரதத்திலும் பழையன கழிந்து புதியன புகுதல் என்ற தத்துவமே மேலோங்கி நிற்கிறது. ஆக மகாபாரதம் உண்மையா பொய்யா என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு மகாபாரதம் தமிழ்கூறும் நல்லுலகத்தோடு எத்தகு தொடர்புடையது என்றும், சங்க இலக்கியங்கள் முதலான பக்தி இலக்கியங்கள் வரை மகாபாரதத்தின் பார்வை என்ன என்பதையும், காலத்தால் முந்தைய கல்வெட்டு, செப்பேடுகள் மகாபாரதம் பற்றி என்ன சொல்கிறது என்பதையும், மகாபாரதம் தமிழ் கூறும் நல்லுலகத்து மாமன்னர்களை எவ்வாறு போற்றுகிறது  என்பதையும் சற்று குறுகலாக காண்போம்....!

முதலாவதாக கிபி 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த #சின்னமனூர் செப்பேட்டில்,

"மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்"
என்ற வரலாற்றுத் தகவல் உள்ளது. இந்த செப்பேட்டின் 100 வது வரி
தலையாலங்கானத்துப் போர் பற்றி உரைக்கிறது. அதன் தொடர்ச்சியாக 102 ஆம் வரியில் "மகாபாரத மொழி பெயர்ப்பு" மற்றும் சங்கம் அமைத்த செய்தியை பதிவு செய்கிறது. இதன் அடிப்படையில் பாண்டிய மன்னர்கள் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் #பாரதத்தை தமிழில்  மொழிபெயர்த்திருந்தனர் என்பதையும், அச்செய்தி ஏழாம் நூற்றாண்டு வரை பரவி இருந்தது என்பதையும் #இச்செப்பேட்டின் மூலம்  தெள்ளத் தெளிவாக அறியலாம்....!
(தொல்லியல் தகவல்களை உபயம் செய்த தொல்லியல் ஆய்வாளர் திரு மா.மாரிராஜன் அவர்களுக்கு நன்றி)

அதோடு பாண்டிய மன்னர்கள் மகாபாரதப் போரில் பங்குகொண்டனர் என்பதை மகாபாரதத்தின்  உத்யோக பர்வத்தில் 172 ஆவது பகுதியில் பீஷ்மர் இவ்வாறு உரைத்கிறார் "Pandya is a maharatha!" said Bhishma" அதாவது பாண்டியனை ஒரு மகாரதன் என்கிறார்....!
இதைப்பற்றி மேலும் படிக்க இந்த விலாசத்தை பயன்படுத்துங்கள்....!👇


அதோடு மகாபரதத்தின் துரோண பர்வத்தில் பாண்டியன் சாரங்கத்வஜன் பற்றிய குறிப்புகள் உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இந்த விலாசத்தை அணுகவும்....!👇👇👇


சேர மன்னர்களிடமும் மகாபாரதம் பற்றிய பார்வை வெகுவாக பதிந்திருந்தது என்பதை  புறநானூற்றின் இந்த வரிகள் மூலம் நிறுவலாம்...!

"அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்"

அதாவது அசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய். என்று மகாபாரதப்போரில் சேரர்களின் பங்கை புறநானூறு விளக்குகிறது....!

மற்றும் பல்லவர் காலத்தில் பாரத மண்டபம் ஏற்படுத்தியதும், அவற்றில் பாரதம் படிப்போருக்கு மானியம் அளிக்கப்பட்டதையும் #கூரம் செப்பேடு கூறிகிறது.....! 

செந்தலைக் கல்வெட்டில் 👇👇👇

"ஸ்ரீபாரதம் வாசிக்க பெரும்புலியூர் ஆத்ரை யகோத்ரத்து வைகாநஸ ஸுத்ரத்து ஸிங்கி நசிஸ்வர பட்டனுக்கு இறையிலியாக குடுத்ததோடு ஸபையோம்" 

என்ற வாசகம் காணப்படுகிறது.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள சுந்தர பாண்டியன் கல்வெட்டு 'திருத்தங்கலூரன் முன்பு மகாபாரதம், இராமாயணம் வாசிப்பதற்காகத் திருவரங்கதேவன் குன்றெடுத்தரனும் அவன் தம்பி திருவரங்கதேவன் உய்யங் கொண்டாழ்வானும் இணைந்து மூன்றரை மா நிலம் தானம்' செய்துள்ளதைக் கூறுகிறது......! 

சங்க இலக்கியங்களில் ஒன்றான #பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் கொடைச் சிறப்பினையும் #குமட்டூர்க்_கண்ணார் பாரட்டுவார். அப்படி  பாரட்டுகையில், நெடுஞ்சேரலாதனின் கொடையையும் ஆற்றலையும் #அக்குரனின்(கர்ணன்) கொடைத்திறனோடு ஒப்பிடுவார்....!

“போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப"

அதாவது 
ஈர் ஐம்பதின்மருடன் (கௌரவர்கள் நூறுபேர்) சேர்ந்து போரிட்டுத் தன் வலிமையை நிலைநாட்டிய அக்குரன் (கர்ணன்) போன்று கொடை வழங்குபவன் நீ என்று சேரலாதனை புகழ்வார் ஆசிரியர்....!

இந்த கதையை அரச பாரதத்தில் மிகவும் அழகாக விளக்கியிருப்பார் அருள் செல்வ பேரரசன் அவர்கள். கூடுதல் தகவல்களுக்கு இந்த விலாசத்தை அணுகவும் 👇👇👇


சிறுபாணாற்றுப்படை யில் காண்டவ வனத்தை நெருப்பு உண்ணும் படி செய்த அர்ச்சுனனின் தமையனாகிய பீமசேனன் எழுதிய #பாக_சாஸ்திரம் எனும் நூல் இருந்த தகவலை தருகிறது....!

"ஓய்மானாட்டு நல்லிக் கோடான் விருந்தளிக்கும் சிறப்பினைப் "பாடுங்கலை மடைநூல் நெறியிற்றப்பாத பல்வேறு சுவை அடிசிலைப் பாணர்க்கு நல்கினான் என்றும், அம்மடைநூலை அருளியவன் #பீமன் என்றும் குறிப்பிடுவார்...!

 “காவரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சை புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வோறு அடிசில்”

பெரும்பாணற்றுப்படை யில் பாண்டவர்கள் கௌரவர்களை வெற்றி கொண்ட செய்தியை கடியலூர் உருத்திரங்கண்ணனார் அழகாக எடுத்துரைப்பார்....! 

 “வெண்கோட் டிரும்பிணம் குருதி ஈர்ப்ப
வீரைம் பதின்மரும் பெருதுகளத் தவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி செடுந்தோர்
ஆராச் செருவினைவர் போல"
கச்சி யோனே கைவண் தோன்றல்”

இது மட்டுமல்லாது சங்க இலக்கியங்களிலேயே கலாத்தொகையில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மகாபாரதச் செய்திகள் வரும். பதிவின் நீளம் கருதி அவற்றை தவிர்க்கிறேன்.....!

நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் முன்புறமுள்ள பாறையில் உள்ள கல்வெட்டானது👇

"ஸ்ரீநட்டாலத்து ஆழ்வார் கோயிலில் மகாபாரதம் வாசிப்பதற்குக் கண்ணன் என்பவர் நிலக்கொடை வழங்கியுள்ளார்" என்கிறது.....!

இவ்வாறு சங்க இலக்கியங்களில் மகாபாரதமானது மக்களுடன் ஒன்றோடொன்று இரண்டற கலந்திருந்தே அன்றி அவர்கள் இது உண்மையா பொய்யா என்று ஆராய்ச்சி நடத்தியதற்கு எந்த வித சான்றுகளும் இல்லை....!

சங்க இலக்கியங்கள் தவிர்த்து காப்பியங்கள் மற்றும் திருமுறைகளில் உள்ள குறிப்புகள் குறித்து தொடர்ந்து காணலாம்....!

சிலப்பதிகாரமும்_மகாபாரதமும்:

காப்பியங்களுள் முதன்மையான #சிலப்பதிகாரம் பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரத நிகழ்வவுகள் பலவற்றைச் சுட்டுகிறது.....!

ஆம், கிபி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டம் #ஆய்ச்சியர்_குரவையில் இரு இடங்களில் இந்நிகழ்வை அதாவது "கண்ணன் பாண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்கு தூது" சென்ற நிகழ்வை சுட்டுகிறது.....!

#முன்னிலைப்பரவல்:

"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே"

#படர்க்கைப்_பரவல்:

"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே"

இதுமட்டுமல்லாது அர்ச்சுனன் காண்டவ வனத்தை அழித்த நிகழ்வும், மகாபாரதப்போர் 18 நாட்கள் நடந்தது என்ற செய்தியையும், சேர அரசன் இரு படைகளுக்கும் உணவளித்த நிகழ்வையும், கண்ணன் சூரியனை தனது சுதர்சனத்தால் மறைத்த நிகழ்வையும் சுட்டுகிறது.....!

(பாடலுக்கான விளக்கம் வேண்டுவோர் மறுமொழியில் வினவலாம்🙂)

#திருமுறைகளும்_மகாபாரதமும்:

(இப்பதிவில் பக்தி இலக்கியங்களில் மகாபாரதம் என்ற தலைப்பில் அர்ச்சுனனுக்கு சிவபெருமான் #பாசுபதாஸ்திரம் வழங்கிய நிகழ்வுகளை காண்போம்)

பதிவுக்கு செல்வதற்கு முன்பு அர்ச்சுணன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்த கோயில் #திரு_விஜயமங்கை_விஜயநாதேஸ்வரர் கோயிலை இந்த விலாசத்தில் சென்றால் காணலாம்....!👇👇👇

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

மகாபாரத போருக்கு முன்பு சூதாட்டம் முடிந்து வனவாசத்தின் இறுதியில் கிருஷ்ணனின் அறிவுரையின் பேரில் சிவபெருமானை நோக்கி அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் இருந்த நிகழ்வு திருமுறைகளில் சுட்டப்படுகிறது....!

#பதினோராம்_திருமுறை:

-காரைக்கால் அம்மையார்

"ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார்_பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு" 

என்று வேடனாக சிவபெருமான் வந்து அருளிய நிகழ்வை சுட்டுகிறார்....!

திருஞானசம்பந்தர்:

"மந்திர முறுத்திறன் மறவர்தம் முடிவுகொ டுருவுடைப் பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால் அத்திரம் அருளும்நம் அடிகள தணிகினர்"

என்று பதினொரு பெயர்களை உடைய அர்ச்சுனனுக்கு சிவபெருமான் அஸ்திரம் அருளினார் என்கிறார்....!

சேரமான் பெருமாள் நாயனார்:

"ஆய விழப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம் போற்றி தூய"

என்று சிவபெருமான் பாசுபதம் அருளியதை நிகழ்வை சுட்டுகிறார்....!

திருநாவுக்கரசர்:

"பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை ஆண்ட வன்னடி யேநினைந் தசையாற் காண்ட லேகருத் தாகி யிருப்பேனே"

எனறு பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கி வரம் இருந்த நிகழ்வை சுட்டுகிறார்....!

மாணிக்கவாசகர்:

-திருவாசகம்

"கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்"

இங்கு கிராதன் என்பது வேடனை குறிக்கும். வேடனாக வேடமெடுத்து அர்ச்சுணனுக்கு அஸ்திரம் அருள வந்தார் என்பதையே உவமையாக கூறுவர்....!

புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் இது சம்பந்தமான சிற்பம் உள்ளது கோயிலில் இச்சிற்பத்தின் அருகே 

“கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ 

என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆக மகாபாரதம் எனும் பெரும் இதிகாசமானது இன்று அல்ல சங்க காலம் முதலே மக்களிடம் புழக்கத்தில் இருந்தது என்பதையும் நம் முன்னோர்கள் பாரதத்தை கண்ணென கருதி தமது வாழ்க்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது....!

மகாபாரதமானது ரிக் யஜுர் சாம அதர்வண வேதத்திற்கு அடுத்தபடியாக ஐந்தாவது வேதம் எனப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளதால் இது உலகின் மிகப்பெரிய காவியமாக கருதப்படுகிறது.இது சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. அறநெறி, வாழ்க்கை முறைகள், கல்வி, பாலியல் தொடர்பான அனைத்து சமூக அத்யாவசியங்களையும் அழகாக எடுத்துரைக்கும் மகா காவியமே மகாபாரதமாகும்......!

சங்க இலக்கியங்களில் அதிசயம்

இப்பூமியைத் தவிர வேறு எங்காவது மனிதனால் வாழ முடியுமா என்று உலகநாடுகள் அனைத்தும் தேடித்தேடி பணத்தையும், நேரத்தையும் செலவு செய்ததே மிச்சம். ஏன் அவர்கள் இந்த தேடலில் தோல்வியுறுகின்றனர் என்பதற்கு முக்கிய காரணம் பூமியைத் தவிர வேறு எங்கும் காற்று இல்லை என்பதாகும்....!
பூமியில் தான் காற்று மண்டலம் உள்ளது. இந்த  காற்று மண்டலமே சூரியனிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும், வருகின்ற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடுத்து நிறுத்துகிறது. இதனாலேயே இப்பூமி மனிதனும், பல்வேறு உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற பகுதியாக உள்ளது....!

இது தவிர, பூமியில் காற்றழுத்தம் தகுந்த அளவில் உள்ளது. ஆகவே தான் பூமியில் நீரானது  நீராவி வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் உள்ளது. ஆனால் இந்த காற்றானது பூமியைத் தவிர வேறு எங்கும் இருக்குமா என்று பணத்தை வாரி இறைத்து  தேடும் இந்த காலகட்டத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே பூமியைத் தவிர காற்று வேறு எங்கும் இல்லை என்பதை கண்டுபிடித்தவன் சங்கத் தமிழன்  என்பது நமக்கு சற்று வியப்பான செய்திதான்....! 
ஆம் இப்பூமியை தவிர மனிதன் வாழ்வதற்கு ஏற்ற பகுதிகள் இல்லை என்பதையும் பூமியில் தான் காற்று உண்டு என்பதையும் வள்ளுவன் பார்வையில் பார்த்தோமேயானால்,

"அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லல்மா ஞாலம் கரி"

அதிகாரம்: அருளுடைமை (குறள் எண்:245)

அதாவது அருளுடையவனாக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர் என்று பூமியை காற்று உள்ள பகுதி என்றும் அதன் மேன்மையை அருளுடையவர்களுடன் ஒப்பிடுகிறார்.....!

இங்கு வள்ளுவன் பூமியில் தான் காற்று உண்டு என்பதை "வளி வழங்கும் பூமி" என்று குறிப்பிடுவதை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு மூன்று பாடல்களில் சொல்கிறது. ஆக திருக்குறளுக்கு முன்பானதுதான் புறநானூறு என்ற கூற்று ஆராயப்படவேண்டியதோடு கிமு 31 ல் தான் திருக்குறள் எழுதப்பட்டதா என்ற கேள்விக்கு இங்கு திரும்பவும் கொடுக்கு முளைக்கிறது. இந்த ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு பதிவை தொடர்வோம்...!

புறநானூறு:

"மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
"வளியிடை வழங்கா" வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்"

பாடியவர்: மார்க்கண்டேயனார்.
அதாவது இடம் விட்டு இடம் பெயரும் இயல்புடைய காற்றும் செல்லாத இடமாகிய, எவ்வுயிரும் செல்லுதற்கரிய ஆகாயத்தைக் கடந்து, வயிரம் வைத்து இழைத்த சக்கரத்தின் குடத்தில் விளங்கும் மணிகள் பொருந்திய ஆரக்கால்களையுடைய பொன்னாலான ஆழிப்படையை போரின் முன்னே ஆற்றலுடன் செலுத்திப் பகைவரை அழிப்பவனாக ஓர் அரசனை உவமையாக்குகிறார் மார்க்கண்டேயனார்....!

இங்கு இடம் விட்டு இடம்பெயரும் தன்மையுடைய காற்றானது பூமியைத் விட்டு எங்கும் செல்ல இயலாதது என்றும் பூமியைத்தவிர வேறு எங்கும் உயிர்கள் வாழ முடியாது என்பதையும் வள்ளுவர் கூறும் கருத்திற்கு ஒத்த கருத்தையே கூறுகிறது. அதோடு இப்பாடலை பாடிய மார்க்கண்டேயர் என்ற பெயரில் புலவர் சங்க காலத்தில் இருந்திருக்கிறார் என்பது சற்று வியப்பான செய்தி. ஏனென்றால் பதினெட்டு புராணங்களில் மார்க்கண்டேய புராணமும் ஒன்று. அதுபற்றி பின்னர் ஒருநாள் பேசலாம்...!

அதோடு பாடாண் திணையில் வெள்ளைக்குடி நாகனார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீதுபாடிய இன்னொரு பாடலிலும் "வளி இடை வழங்கா வானம்" என்ற சொல்லாடல் இடம்பெற்றுள்ளது...!

"நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்"
அதாவது நாடுகெழுச் செல்வத்துப் பீடுகெழு வேந்தனே! நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாக 
காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத வானத்தால் சூழ்ந்த மண் செறிந்த இவ்வுலகில் குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு 
உரியவராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தருள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது 
உன்னுடைய அரசுதான் பெருமானே! என்று சோழனை புகழ்கிறார்...!
இங்கு "வளி இடை வழங்கா வானம்" என்ற வரிகளால் வழிமண்டல அடுக்கை தாண்டி காற்றால் செல்ல முடியாது என்றும் அங்கு காற்று இல்லை என்றும் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது....!

அதோடு குறுங்கோழியூர்கிழார்.
சேரமான் மீது பாடிய இன்னொரு புறப்பாடலிலும் "வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும்" என்ற வரிகள் மூலம் காற்று வாழும் திசையையும், ஏதுமில்லாத ஆகாயத்தையும் என்று எல்லாவற்றையும் அளந்து அறிந்தாலும் உன்னை அளக்க முடியாது. என்று சேரமானை புகழ்கிறார். இங்கும் வளிமண்டலத்தை தாண்டி காற்று இல்லை என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார் புலவர்.....!

யார் அந்தணர்கள்

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர்.....!

இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.....!

பரிபாடல்👇👇

"ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என"

மதுரைக்காஞ்சி👇👇👇

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி "

"தாதுண் தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட” 

திருமுருகாற்றுப்படை👇👇👇

"மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்"

பெரும்பாணாற்றுப்படை👇👇👇

"செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு"      

"பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் 
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்"

பதிற்றுப்பத்து👇

அந்தணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்....!

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்"

"அறம் புரி அந்தணர்” 

"கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்"

இப்படி அனைத்து சங்க இலக்கியங்களிலும் அந்தணனுக்கு தெளிவாக வேதம் ஓதுதல் முதலான ஆறு தொழில்கள் இருந்தது என்று  தான் சுட்டுகிறது....!

ஆக தப்பு என்மேல் இல்லை அன்பர்களே அனைத்தும் கைபர் கணவாய் வழியாக ஆரிய பார்ப்பானின் சதி😁😁😁

சிந்தித்து செயலாற்றுங்கள்.....!

முருகன் முப்பாட்டனா?

நாம எப்பவுமே யாரு வம்புக்கும் போறது இல்லை.அதை மீறி வம்பு வந்தால் யாருடா நீ வந்தேறி னு #வம்பு கிட்டயே  எதிர் கேள்வி கேட்டுட்டு நாமளும் ஒரு வந்தேறி பட்டத்தை வாங்கீட்டு நகரும் ஆளு😊😊😊...!

அந்த வகையில் மூஞ்சி புக்குல என்ன நடக்குது னு பார்க்கலாம் னு எனது பக்கத்தை  #SCROLL பண்ணிக்கிட்டு இருந்தேன். அங்கே ஒரே #ஜண்டை முருகன் கருப்பு நிறமா? வெள்ளை நிறமா னு...!😂😂😂

அந்த கேப் ல ஒரு அண்ணன் ரொம்ப கோபமா வடநாட்டு முருகன் தென்னாட்டு முருகன் ஆரியன் பாராப்பான் னு பிரிச்சி மேஞ்சிட்டாரு😳 அண்ணனின் விசுவாசி போல🙄🙄🙄....!

அங்கு வைக்கப்பட்ட அடிப்படை புரிதலற்ற வாதங்கள்😊

🖤 முருகன் கருப்பு நிறத்தவன்...!
🖤 முருகன் முப்பாட்டன்..!
🖤 முருகன் எங்க தாத்தா..!
🖤 முருகனை தமிழர்கள் மட்டும் தான் வழிபடுறாங்க...!
🖤 ஆரிய பிராமணர்கள் முருகனை இழிவு படுத்தி வெள்ளை நிறமா மாத்திட்டாங்களாம்...!
🖤 மிக முக்கியமா முருகன் சிவனுக்கு மகன் இல்லையாம்🤫

ஆக இவர்களிடம் நான் கேட்கும் கேள்வி என்னா னா சக்திதாஸ் ன் முப்பாட்டன்கள் எழுதிய புராண இதிகாசங்களை தான் நம்பவில்லை👇👇

நம்ம அண்ணன் #சீமானின் முப்பாட்டன்களான 
கடுவனிளவெயினனார், ஆசிரியன் நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார், நல்லழிசியார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், #நக்கீரர், #அருணகிரிநாதர் போன்றோர்  எழுதிய..!👇

❤️பரிபாடல்
❤️ திருமுருகாற்றுப்படை
❤️ திருப்புகழ்

இந்த நூல்கள் சொல்வதையாவது பேசுங்கடா மங்குனி ஞானிகளா னு கேட்க தோணுச்சி. ஆனால் சிரிச்சிட்டு இந்த பக்கமா ஓடி வந்துட்டேன்🚶🏽‍♂️🚶🏽‍♂️🚶🏽‍♂️.

சரி கொஞ்சம் கருத்து சொல்லுவோம். யாரும் கேட்கமாட்டாங்க🤒 விருப்பம் உள்ளவங்க தெரிஞ்சுக்கோங்க👇

"செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப"....!

"ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை"....!

என்று பரிபாடல் #கடுவனிளவெயினனார் செவ்வேளின் நிறம் கதிரவன் ஒளி ஒக்கும் என்று உவமையாக்குகிறார்....!   ஆனால்  நப்பண்ணனாரோ  கொழுந்துவிட்டெயும் தீயின் நிறத்தை  உவமையாக்குவார் இப்பாடலை....!

இன்னும் ஒருபடி மேலே சென்று #திருமுருகாற்றுப்படை யோ👇👇👇

"செய்யன் சிவந்த ஆடையன் செல்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்" னு சொல்லுது...!

ஆச்சா😊 இங்கே உங்க முப்பாட்டனின் நிறத்தை மாற்றியது ஆரிய பிராமணர்களான #நக்கீரரும் #கடுவனிளவெயினனாரும் தான் னு ஊர ஏமாத்தணும். இதுக்கு யார் தயாரோ பின்னூட்டத்துக்கு வாங்க😂😂😂🚶🏽‍♂️....!

அடுத்து கீழே கொடுத்துள்ள விலாசத்தில் சென்றால் உலகம் முழுவதும் முருகன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை காணலாம்...!👇👇👇
அடுத்ததாக முருகன் எங்கள் முப்பாட்டன் சிவனுக்கு மகன் அல்ல என்று ஒரு கோஷ்ட்டி சுத்திக்கிட்டு திரியுது அவர்களுக்கான பதிவு இது👇👇👇


இன்னும் இதையே சொல்லி ஊரை ஏமாத்துறவங்க இந்த இலக்கியப் பாடலுக்கு மட்டும் விளக்கம் சொல்லுங்க👇

"முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்"

ஆச்சா....!👇

முருகனைக் கார்த்திகைப் பெண்களும்  அன்னை பார்வதியும்  இருவருக்கும் மகனெனப் பரிபாடல் சொல்லுது(8:127,128)....!

அதோடு முருகன் சூரபத்மனை மாய்த்ததையும் பரிபாடல் குறிப்பிடுகிறது. முருகன் தன் ‘பிணிமுகம்’என்னும் யானை மீதமர்ந்து சூரன்தங்கி வாழும் கடலுக்குச் சென்றார்; அவன்மா மரமாகுவும் மலையாகவும் மாற்ருருக் கொண்டு மறைந்தனன். கந்தவேள் தன்னுடைய வேலை எறிந்து மாவினை அழித்தார். மலையினையும் அழித்தார்; சூரனின் சுற்றத்தாரையும் அழித்தார் என்று பரிபாடல் சொல்லுது...!

அதோடு முருகன் ஆறு தலைகளையும் இளங்கதிர் மண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர் னு பரிபாடல் சொல்லுது👇

"குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை"!

கந்தவேள் தன் பன்னிருகைகளிலும் பன்னிருபடைகளைக் கொண்டுள்ளார் என்றும் அவர்தம் முந்நான்கு தோளும் முழவினை ஒப்பானது என்றும்  முருகனது பேரறிவையும், பேராற்றலையும் புலப்படுத்தவே அறுதலைகளையும், பன்னிருகைகளையும் உடையவராகஅவரை உருவகம் செய்துள்ளனர் என்கிறார் புலவர்👇

"மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன்"

"ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்குமே"

என்ற திருமுருகாற்றுப்படை வரிகள் மூலம் சங்ககாலத்திலே #வேதநெறியும் வேதநெறி நின்று யாகங்களை வைதீக தர்மத்துடன் நால்மறை முழங்க ஆற்றும் பண்பாடும் நிலவி வந்திருப்பதை தெளிவாக சுட்டி காட்டுகிறது...!

"மூன்று வகை குறித்த முத்தீச் செல்வம்’
மூன்றுவகையான யாகாக்னியைப் போற்றுவதையே செல்வமாகக் கொண்டவர்கள்
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்"

மூன்று புரிகளைக் கொண்ட மூன்று நூல்களை(பூநூல்) அணிந்தவர்கள் இவ்வாறாக வைதீக, வேத, வேதாங்க தர்மம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களிடம் பரவி இருந்ததை பதிவு செய்கிறார் நக்கீரர்....!

இப்போது ஒரு கூட்டம் திருமுருகாற்றுப்படை காலம் என்ன பரிபாடலில் ஆரிய இடைச்செருகல் இரிக்கி னு ஒரு கூட்டம் வரும். ஆக🏃🏃🏃

இரவு வணக்கம் மக்களே😊

முருகனும் மயிலும்

முருகனும் மயிலும்:

சமீபத்தில் சுகி சிவம் அவர்கள் முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்ற பிளவுப்பார்வைக்கு மேற்கோள் காட்டிய தமிழ் முருகன் என்ற நூலை வாசித்தபோது அதில் வழக்கமான சில திரிபுவாதங்கள் இருந்தாலும் முருகனுடைய வாகனம் யானைதான் என்றும் மையில் முருகனின் வாகனம் இல்லை என்றும் அது ஆரிய திணிப்பு என்றதொரு கருத்தை படிக்க நேர்ந்தது....!

ஆனால் தமிழ் முருகன், மலையாள முருகன், சமஸ்கிருத முருகன் என்ற பிளவுப்பார்வையை நக்கீரர் காணாதபோது, அருணகிரியார், குமரகுருபரர் போன்ற மாபெரும் முருகபக்தர்கள் காணாதபோது இவர்களின் பிளவுப்பார்வை சற்றே சிந்திக்க வேண்டும்...!
தமிழ் கடவுள் என்ற பிளவுப்பார்வையை இவர்களே மேற்கோள் காட்டும் திருமுருகாற்றுப்படையை வைத்தே உடைத்துவிடலாம். அதாவது நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்கிறார், முருகன் இமயத்தில் பிறந்து கங்கையில் வளர்ந்தவனாம். இதனால்தான் #காங்கேயன் என்ற பெயர் முருகனுக்கு ஏற்பட்டது....!

"நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ
ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானைத்தலைவ"
(திருமுருகு- 253-260)
அதாவது நக்கீரர் சொல்கிறார், தீயானது தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டுவந்து நெடிய பெரிய
இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த
பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால்
பாலூட்டப்பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே...!

ஆலமர் செல்வனாகிய சிவபெருமானின் புதல்வரே(முருகனே),இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே..!

வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின்
மைந்தரே, அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின்
குழந்தையே வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே என்று திருமுருகாற்றுப்படையில் பார்வதி தேவியின் மகன் என்றும் இமயமலையில் பிறந்தவன் என்றும் தேவர்களின் சேனாதிபதி என்றும் உரைக்கிறார்....!

இதில் வானோர் வணங்குவில் தானைத்தலைவ என்ற வரிகளை பாரதியாரின் கண்ணன் பாட்டின் மூலமாக கண்டோமேயானால் #பகவத்கீதை-10- 24 ல் இப்படி சொல்கிறார் பகவான் கிருஷ்ணர்....!

'புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம் 
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர"

அதாவது அர்ச்சுணா! புரோகிதர்களில் நான் ப்ரகஸ்பதி, படைத்தலைவர்களில் நான் ஸ்கந்தன், நீர்களில் நான் கடல் என்று படைத்தளபதிகளில் சிறந்தவன் முருகன் என்பதை பகவத்கீதையே ஒப்புக் கொள்கிறது. இருந்தும் இந்த விளக்கங்களை ஒதுக்கிவிட்டு பதிவுக்கு வருவோம்....!

ஆக பதிவின் முதற்பகுதியில் குறிப்பிட்டதுபோல சங்க இலக்கியங்களில் முருகனுடைய வாகனமாக மயில் இல்லை என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சங்க இலக்கியங்களை கொஞ்சம் புரட்டுவோம். அதற்கு முன்பாக  சங்க இலக்கியங்களில் வரும் பிணிமுகம் என்பதற்கு யானை என்று சில உரை ஆசிரியர்கள் உரை எழுதி உள்ளனர். சிலர் மயிலையும், யானையையும் குறிக்கும் என்றும் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....!

அதை சற்று ஆழமாக நிகண்டுகளின் வழியாக பார்த்தால் யானையின் பெயர்களில் ஒன்றாக பிணிமுகம் என்ற சொல்லாடலை எந்த நிகண்டும் குறிப்பிடவில்லை. மாறாக பிங்கல நிகண்டு மயிலுக்கு உரிய பெயர்களுள் ஒன்றாக பிணிமுகத்தை சொல்கிறது. அதோடு பிணிமுகம் என்பதற்கு அன்னம், பறவை போன்ற மறு பெயர்களையும் வருகிறதே அன்றி நான் அறாந்தவரையில்  யானையை குறிப்பிடவில்லை.....!

முதலில் புறநானூற்றை நோக்குவோம். அதாவது புறப்பாடலில் முருகனுக்கு வாகனமாக மயில் உள்ளதா என்பதை பார்க்கலாம்....!👇👇👇

"மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்" 
(புறநானூறு-56)

விளக்கம்:

அதாவது கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவிய உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் #திருமாலும், 
நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (பிணிமுகம்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன் என்று நக்கீரனார் பாண்டியனை செவ்வேளோடு ஏந்திப் பாடுகிறார்....!

இங்கு வரும் மயில் கொடியையும், பிணிமுகம் என்பது மயில் வாகனத்தையும் தான் குறிக்கும் என்று புலியூர் கேசிகன் அவர்கள் உரை வகுக்கிறார்....!

திருமுருகாற்றுப்படை:

"ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன் கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டுஆண்டு உறைதலும் அறிந்த வாறே" (திருமுருகாற்றுப்படை)

பொருள்:

அதாவது மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம்
ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும்
ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத
வலிமையை உடைய 'பிணிமுகம்' எனப்படும் யானையை [அல்லது
மயிலினை] வாழ்த்தி, தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு
அடையவேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில்
திருமுருகப்பெருமான் தங்கவும் செய்வான் என்று யான் அறிந்தவற்றை
அறிந்த வண்ணமே உரைத்தேன் என்பது பொருளாகிறது. இங்கு பிணிமுகம் என்பது யானையையும் குறிக்கும், மயிலையும் குறிக்கும் என்று உரை ஆசிரியர்கள் உரை வகுக்கின்றனர். ஆனால் நிகண்டுகளின் அடிப்படையில் மயிலை தான் குறிக்கும் என்பது நமது பதிவின் உட்கரு🤒🚶🚶...!

சிலம்பதிகாரம்:

"அணிமுகங்க ளோராறு ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே"
அதாவது பிணி முகம் எனப்படும் மயிலின் மீதேறி அசுரர்களுடைய பெருமை கெடுமாற்றானே, வானகத்து தலைவனாகிய இந்திரன் போற்றப் பகைவர்களை அழித்த வெள்ளிய வேலும், அழகிய ஆறுமுகங்களையும் பன்னிருகைகளையும் பிறர் தனக்கு ஒப்பில்லையாக உடையானாகிய முருகன் ஏந்திய வேலேயாம் என்று பிணிமுகம் என்பது முருகனின் வாகனம் என்று இளங்கோவடிகளும் கூறுகிறார்....!

பரிபாடல்

"மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்"

விளக்கம்:

நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியையுடைய அம்மயிலாகிய ஊர்தியையுடைய முருகப்பெருமான் என்று உரை ஆசிரியர்கள் உரை வகுக்கின்றனர்....!

கல்லாடம்:

"களித்தெனச்
சுற்றுடுந் தோங்கிய வாயமுந் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய
மூவிரு திருமுகத் தொருவே லவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றின்
மனவணி மடந்தை வெறியாட் டாளன்"

விளக்கம்:
அதாவது பிணிமுகம், மஞ்ஞை என்பதை   பிணிமுகம் என்னும் யானையினையும், மஞ்ஞை எனும் மயிலினையும் அழகிய ஆறுமுகங்களையும் போர் முனையிலே ஏந்தி ஒப்பற்ற வேற்படையினையுமுடைய முருகவேளுக்கு வெறியாட்டு நடந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுகிறார் ஆசிரியர். இங்கு கவனிக்க வேண்டியது #மஞ்ஞை  என்பதற்கு நிகண்டுகளில் மயில் என்றொரு பெயரும் உள்ளதால் இங்கு மயிலும் யானையும் முருகனுடைய வாகனமாக கொள்ளலாம். இந்த கால்லாடம் காலத்தால் முற்பட்டதாயினும்  இரண்டும் தனித்தனியே வருவதால் சிறப்பு. இருந்தாலும் நிகண்டுகளின் அடிப்படையில் பிணிமுகம் என்பது மயிலையே குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....!

ஆக நமது இலக்கியங்கள் முருகனுடைய வாகனமாக மயிலையும் குறிக்கிறது என்பது தெளிவு. குறிப்பாக நான் சிறு வயதில் முருகன் கேயிலுக்கு செல்லும்போது எனக்கு பிடித்தமான ஒரு பாடலை உங்களுடன் பகிர்கிறேன். மயில் முருகனுடைய வாகனம் இல்லை என்றதும் எனக்கு நியாபகம் வந்ததே அந்த பாடல்....!

"பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ர மணியனே வா
என் இச்சையெல்லாம் உன்மேல் வைத்தேன் - முருகா
எள்ளளவும் பயமில்லயே"

தொடர்ச்சி : https://youtu.be/IIlQH0SvdYg

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...